என்னவனே எங்கிருகிறாய்...
கடல் தாண்டும் தூரத்திலா
இல்லை கைக்கெட்டும் தூரத்திலா..
கேட்கும் பெயர்களையெல்லாம்
என் பெயரோடு இணைத்து
சொல்லி பார்க்கிறேன்..
அது உன் பெயராய் இருக்குமோ என்று
எண்ணியபடி..
முட்களை ரகசியமாய் கேட்கிறேன்
உன் பார்வையின் கூர்மை கூட
இப்படித் தான் இருக்குமோ என்று..
உன் தோல் சாய்ந்தால் எப்படி இருக்கும்
என்று எண்ணிக்கொண்டே - தலை சாய்கிறேன்
வீட்டுச சுவரில்..
தனிமையை தூக்கிலிடுவேன்
நாம் அறிமுகமாகிக் கொள்ளும் போது..
உனக்காக எழுதிய கடிதங்கள்
முகவரி இல்லாமல் தவிக்கிறது..
கனவுகளை கருப்பு வெள்ளை ஆக்குகிறாய்
வெறும் நிழலை மட்டும் கனவில் பதித்து..
என்று உன் நிஜம் காண்பேன்..
என்று உன் கரம் சேர்ப்பேன்..
காத்திருக்கிறேன்..
காத்திருக்கிறேனடா காதலை கையில் ஏந்தி..